விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் தொடக்கம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் தொடக்கம்

லண்டன்:  விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் லண்டனில் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனும் நம்பர் 1 வீரருமான நோவாக் ஜோகோவிச் (செர்பியா), சுவிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர், ஸ்பெயினின் ரபேல் நடால் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இளம் வீரர்கள் அலெக்ஸாண்டர் ஸ்வெரவ் (ஜெர்மனி), டொமினிக் தீம் (ஆஸ்திரியா), சிட்சிபாஸ் (கிரீஸ்) ஆகியோரும் பட்டம் வெல்ல வரிந்துகட்டுகின்றனர்.   இடுப்பு பகுதி காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்துகொண்டு ஓய்வெடுத்து வந்த இங்கிலாந்து வீரர் ஆண்டி மர்ரே ஆண்கள் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளில் விளையாட உள்ளார்.மகளிர் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியன் ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி), ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்தி, நவோமி ஒசாகா (ஜப்பான்), கரோலினா பிளிஸ்கோவா, பெத்ரா குவித்தோவா (செக். ), சிமோனா ஹாலெப், செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா), மரியா ஷரபோவா (ரஷ்யா) உட்பட முன்னணி வீராங்கனைகள் களமிறங்குகின்றனர்.

.

மூலக்கதை