அரையிறுதி வாய்ப்பை இழந்த நிலையில் இலங்கை - வெஸ்ட்இண்டீஸ் சம்பிரதாய மோதல்: செஸ்டர்-லீ-ஸ்டிரிட்டில் இன்று நடக்கிறது

தமிழ் முரசு  தமிழ் முரசு
அரையிறுதி வாய்ப்பை இழந்த நிலையில் இலங்கை  வெஸ்ட்இண்டீஸ் சம்பிரதாய மோதல்: செஸ்டர்லீஸ்டிரிட்டில் இன்று நடக்கிறது

லண்டன்:  உலக கோப்பை கிரிக்கெட் லீக் தொடரில் செஸ்டர்-லீ-ஸ்டிரிட்டில் இன்று நடக்கும் 39வது ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் இலங்கையும், வெஸ்ட் இண்டீசும் மோதுகின்றன. உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் செஸ்டர்-லீ-ஸ்டிரிட்டில் இன்று (திங்கட்கிழமை) மாலை 3 மணிக்கு நடக்கும் 39வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன்கள் இலங்கையும், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.ஏற்கனவே அரைஇறுதி வாய்ப்பை இழந்து விட்ட இவ்விரு அணிகளும் ஆறுதல் வெற்றிக்காக களம் காண்கின்றன. இவ்விரு அணிகளும் உலக கோப்பை கிரிக்கெட்டில் 6 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்து அதில் 2 போட்டியில் இலங்கையும், 4 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் வெற்றி பெற்றுள்ளன.

புள்ளிப்பட்டியில் இலங்கை அணி 7 போட்டியில் 2ல் வெற்றி, 3ல் தோல்வியடைந்து 6 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது.

அதேநேரத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 போட்டியில் 1ல் வெற்றி, 5ல் தோல்வியடைந்து 3 புள்ளிகளுடன் 9 இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை