பிஎஸ்என்எல் நிறுவனம் தனது சேவைகளை மேம்படுத்த 11 ஆயிரம்…

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
பிஎஸ்என்எல் நிறுவனம் தனது சேவைகளை மேம்படுத்த 11 ஆயிரம்…

பிஎஸ்என்எல் நிறுவனம் தனது சேவைகளை மேம்படுத்த 11 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளது. மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், நாடாளுமன்றத்தில் இத்தகவலை தெரிவித்தார். கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது, தொலைபேசி தொடர்பகங்களை நவீனமயமாக்குவது உள்ளிட்ட பணிகள் இத்தொகையை கொண்டு மேற்கொள்ளப்படும் என்று எழுத்து மூலமான பதிலில் அவர் தெரிவித்தார். மேலும் வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்துவதற்கும் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என அமைச்சர் கூறியுள்ளார். போதிய முதலீடுகள் செய்து கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாத காரணத்தால்தான் தனியார் நிறுவனங்களின் போட்டியை பிஎஸ்என்எல் - ஆல் சமாளிக்க இயலாமல் போனதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மூலக்கதை