உலகக்கோப்பை கிரிக்கெட்: பங்களாதேஷ் அணியை எதிர்த்து இலங்கை அணி களமிறங்குகிறது

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
உலகக்கோப்பை கிரிக்கெட்: பங்களாதேஷ் அணியை எதிர்த்து இலங்கை அணி களமிறங்குகிறது

உலக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 2-வது லீக் போட்டியில் இலங்கை அணி, பங்களாதேஷ் அணியை எதிர்த்து விளையாடுகிறது.

 

மெல்பர்ன் நகரில் நடைபெறும் இந்த 18-வது லீக் ஆட்டம் இந்திய நேரப்படி காலை ஒன்பது மணிக்கு தொடங்குகிறது. நடப்புத் தொடரில், முதல் போட்டியில் நியூசிலாந்திடம் தோல்வி அடைந்த இலங்கை அணி, 2-வது லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியிடம் இழுபறி வெற்றியை பெற்றது. இதனால் அடுத்த சுற்றுக்கு முன்னேற இன்றைய போட்டியில் வெற்றிபெற வேண்டியது இலங்கை அணிக்கு அவசியம். பங்களாதேஷ் அணியை பொறுத்தவரை ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதாலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆட்டம் மழையால் கைவிடப்பட்டதாலும், 3 புள்ளிகள் பெற்றுள்ளது. இதனால் இன்றைய வெற்றி பங்களாதேஷ் அணிக்கும் அவசியம். மேலும் முக்கிய அணிகளுக்கு அதிர்ச்சி தோல்வி கொடுக்கும் ஆற்றல் பங்களாதேஷ் அணிக்கு உள்ளதால், இந்த ஆட்டத்தை இருநாட்டு ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

மூலக்கதை