சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் மூடப்பட்ட நோக்கியா செல்ஃபோன் தொழிற்சாலையை…

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் மூடப்பட்ட நோக்கியா செல்ஃபோன் தொழிற்சாலையை…

சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் மூடப்பட்ட நோக்கியா செல்ஃபோன் தொழிற்சாலையை மீண்டும் திறக்க நடவடிக்க எடுக்குமாறு பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, டிஐபிபி எனப்படும் தொழிற் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறை மற்றும் மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை ஆகியவற்றுக்கு பிரதமர் அலுவலகம் கடிதம் அனுப்பியுள்ளதாக டெல்லியில் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேக் இன் இந்தியா திட்டத்துக்கு எதிர்மறையான கருத்தை நோக்கியா தொழிற்சாலை மூடப்பட்டது ஏற்படுத்தக்கூடும் என பிரதமர் கருதுவதாக டிஐபிபி உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். நோக்கியாவின் உலகிலேயே மிகப் பெரிய தொழிற்சாலையான ஸ்ரீபெரும்புதூர் ஆலை மூடப்பட்டது, அன்னிய முதலீட்டாளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்ததாகவும் அவர் கூறினார். எனவே, கடந்த நவம்பர் 1ம் தேதி மூடப்பட்ட நோக்கியா தொழிற்சாலையை மீண்டும் திறப்பது தொடர்பான அறிவிப்பை மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி வெளியிடக்கூடும் என்றும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மூலக்கதை