குழந்தை கொலை: டாக்டர் விளக்கம்

தினமலர்  தினமலர்
குழந்தை கொலை: டாக்டர் விளக்கம்


ஹுஸ்டன்:கேரளாவை சேர்ந்தவன் வெஸ்லி மாத்யூஸ். இவனும் இவனது மனைவியும், அமெரிக்காவில் உள்ள ஹுஸ்டன் நகரில் வசித்தனர். இவர்கள், பீஹாரை சேர்ந்த பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்தனர். இந்த 3 வயது குழந்தை, 2017ல், காணாமல் போனது. பின், இரண்டு வாரங்களுக்கு பின், குழந்தையின் இறந்த உடல், சாலையோரத்தில் கண்டெடுக்கப்பட்டது. இந்த கொலை வழக்கில், வெஸ்லி மீது, கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தற்போது, வெஸ்லி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளான். குழந்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டரிடம், நீதிபதிகள் விசாரணை நடத்தினர். அப்போது, 'குழந்தையின் உள் உறுப்புக்கள், புழுக்களால் பெரும் அளவு அரிக்கப்பட்டு இருந்ததால், மரணத்துக்கான காரணம் தெரியவில்லை' என, தெரிவித்தார். இந்த வழக்கில் விரைவில், தீர்ப்பு வழங்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை