கால் இறுதியில் நெதர்லாந்து

தினகரன்  தினகரன்
கால் இறுதியில் நெதர்லாந்து

பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் பிபா மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடரின் கால் இறுதியில் விளையாட நெதர்லாந்து அணி தகுதி பெற்றது. ரவுண்ட் ஆப் 16 போட்டியில் ஜப்பான் அணியுடன் மோதிய நெதர்லாந்து அணி 2 -1 என்ற கோல் கணக்கில் போராடி வென்று கால் இறுதிக்கு முன்னேறியது. அந்த அணியின் லைகி மார்டென்ஸ் 17வது மற்றும் 90வது நிமிடத்தில் அபாரமாக கோல் அடித்தார். ஜப்பான் சார்பில் யுயி ஹேஸ்கவா 43வது நிமிடத்தில் ஒரு கோல்  போட்டார். சிறந்த வீராங்கனை விருதை நெதர்லாந்தின் மார்டென்ஸ் தட்டிச் சென்றார். மற்றொரு கால் இறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் இத்தாலி அணி 2-0 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தியது.29ம் தேதி நடைபெற உள்ள 3வது கால் இறுதிப் போட்டியில் இத்தாலி - நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.

மூலக்கதை