போரில்லை; இருந்தால் நீடிக்காது ஈரானுக்கு டிரம்ப் வித்தியாச மிரட்டல்

தினமலர்  தினமலர்
போரில்லை; இருந்தால் நீடிக்காது ஈரானுக்கு டிரம்ப் வித்தியாச மிரட்டல்

வாஷிங்டன், : 'ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுக்காது. அவ்வாறு போர் தொடுத்தால், அந்த போர், நீண்ட காலம் நீடிக்காது,'' என, அமெரிக்க அதிபர், டொனால்ட் டிரம்ப் கூறினார்.

அமெரிக்காவிற்கும், மேற்காசிய நாடுகளில் ஒன்றான, ஈரானுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக நிலவும் மோதல் போக்கு, சமீப காலமாக தீவிரமடைந்துள்ளது. ஈரான் மீது அமெரிக்கா, எந்நேரமும் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம், உலக நாடுகளில் நிலவுகிறது.
இந்நிலையில், அமெரிக்காவின், 'பாக்ஸ் பிசினஸ் நியூஸ்' என்ற செய்தி நிறுவனத்திற்கு, அதிபர் டிரம்ப், நேற்று பேட்டியளித்தார்.


அப்போது அவர் கூறியதாவது:
ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுக்காது என எண்ணுகிறேன். அதையும் மீறி போர் நடந்தால், அது நீண்ட காலம் நீடிக்காது என்பதை நான் உறுதியாக சொல்வேன. ஏனென்றால், நாம் வலுவாக உள்ளோம்; நம் படை பலம், மிகவும் வலுவாக உள்ளது. இவ்வாறு, டிரம்ப் கூறினார்.
'போர் நீண்ட காலம் நீடிக்காது; நாம் வலுவாக உள்ளோம்' என, டிரம்ப் கூறுவதை பார்க்கும் போது, ஈரானுடன் அமெரிக்கா போரில் ஈடுபட்டால், அந்நாட்டிற்கு கடும் சேதத்தை ஏற்படுத்தி, குறுகிய நாட்களில் தோல்வி அடையச் செய்யும் என்பதை, அவர் மறைமுகமாக கூறுகிறார்.


மூலக்கதை