விண்டீசை வீழ்த்துமா இந்தியா: இன்று விறுவிறு

தினமலர்  தினமலர்
விண்டீசை வீழ்த்துமா இந்தியா: இன்று விறுவிறு

மான்செஸ்டர்: உலக கோப்பை தொடரில் இன்றைய லீக் போட்டியில் இந்தியா, விண்டீஸ் அணிகள் மோதுகின்றன.
இங்கிலாந்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இன்று மான்செஸ்டரில் நடக்கவுள்ள லீக் போட்டியில் இந்தியா, விண்டீஸ் அணிகள் மோதுகின்றன.
இந்திய அணி 5 போட்டிகளில் 4 வெற்றி (ஒரு போட்டியில் முடிவு இல்லை) பெற்றுள்ளது.
உலக கோப்பை அரங்கில் இரு அணிகளும் இதுவரை 8 முறை மோதி உள்ளன. இதில் 5 வெற்றி ,3 தோல்வி பெற்றுள்ளது. இன்று நடக்க உள்ள போட்டியில் இந்தியா வெற்றி கணக்கை துவங்கும் என நம்பலாம்.


மழைக்கு வாய்ப்பில்லை.



போட்டி நடக்கவுள்ள மான்செஸ்டர் நகரில் வெப்பநிலை அதிகபட்சம்,25 , குறைந்த பட்சம்12 டிகிரி செல்சியாக இருக்கும் என மழை வர வாய்ப்பில்லை. ரசிகர்கள் போட்டியை முழுமையாக பார்க்கலாம்.

மூலக்கதை