பாகிஸ்தானுக்கு 238 ரன்கள் இலக்கு

தினமலர்  தினமலர்
பாகிஸ்தானுக்கு 238 ரன்கள் இலக்கு

பர்மிங்காம்: பாகிஸ்தானுக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் ஜேம்ஸ் நீஷம், கிராண்ட்ஹோம் அரைசதம் கடந்து கைகொடுக்க, நியூசிலாந்து அணி 50 ஓவரில் 237 ரன்கள் எடுத்தது.
இங்கிலாந்தில், 12வது ஐ.சி.சி., உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. பர்மிங்காமில் நடக்கும் லீக் போட்டியில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் விளையாடுகின்றன. இரு அணிகளிலும் மாற்றம் செய்யப்படவில்லை. மழையால் போட்டி, ஒரு மணி நேரம் தாமதமாக துவங்கியது. 'டாஸ்' வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், 'பேட்டிங்' தேர்வு செய்தார்.


நியூசிலாந்து அணிக்கு மார்டின் கப்டில் (5) ஏமாற்றினார். ஷஹீன் அப்ரிதி 'வேகத்தில்' கோலின் முன்ரோ (12), ராஸ் டெய்லர் (3), டாம் லதாம் (1) வெளியேறினர். நியூசிலாந்து அணி, 4 விக்கெட்டுக்கு 46 ரன் எடுத்து திணறியது. ஷதாப் கான் 'சுழலில்' வில்லியம்சன் (41) சிக்கினார்.பின் இணைந்த பின் இணைந்த ஜேம்ஸ் நீஷம், கோலின் டி கிராண்ட்ஹோம் ஜோடி பாகிஸ்தான் பந்துவீச்சை எளிதாக சமாளித்து அரைசதம் கடந்தனர். ஆறாவது விக்கெட்டுக்கு 132 ரன் சேர்த்த போது கிராண்ட்ஹோம் (64) 'ரன்-அவுட்' ஆனார். நியூசிலாந்து அணி 50 ஓவரில், 6 விக்கெட்டுக்கு 236 ரன்கள் எடுத்தது. நீஷம் (97), சான்ட்னர் (5) அவுட்டாகாமல் இருந்தனர். பாகிஸ்தான் சார்பில் ஷஹீன் அப்ரிதி 3 விக்கெட் வீழ்த்தினார்.

மூலக்கதை