சர்வதேச அளவிலும் தங்கம் விலை உயர்வு

தினமலர்  தினமலர்
சர்வதேச அளவிலும் தங்கம் விலை உயர்வு

புதுடில்லி : தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச சந்தையில், 6 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு, விலை அதிகரிப்பு நடந்துள்ளது.


சென்னையில், 17ம் தேதி ஒரு கிராம் தங்கம், 3,132 ரூபாயாக இருந்தது, நேற்று, 3,303 ரூபாயாக அதிகரித்துள்ளது. தலைநகர் டில்லியில், 10 கிராம் தங்கம், 200 ரூபாய் அதிகரித்து, நேற்று, 34,470 ரூபாயாக உயர்ந்தது.


உள்நாட்டு நகை உற்பத்தியாளர்கள் தேவை அதிகரித்ததாலும், அமெரிக்கா - ஈரான் நாடுகளுக்கு இடையே மோதல் காரணமாக தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்ததாலும், இந்த விலை உயர்வு ஏற்பட்டது. சர்வதேச சந்தையில், ஒரு, 'அவுன்ஸ்' தங்கம், அதாவது, 31.10 கிராம் தங்கம் விலை, 1,429.80 அமெரிக்க டாலராக இருந்தது.


தலைநகர் டில்லி சந்தையில், 99.9, 99.5 சதவீதம் சுத்தமான தங்கத்தின் விலை, 200 ரூபாய் அதிகரித்து, முறையே, 34,470, 34,300 ரூபாயாக இருந்தது.

மூலக்கதை