தமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் : தேர்தல் ஆணையம்

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் : தேர்தல் ஆணையம்

டெல்லி : தமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்திற்கான 6 மாநிலங்களவை எம்பி பதவிகள் வரும் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைகிறது. 6 இடங்களுக்கு மாநிலங்களவை தேர்தல்தமிழகத்தில் இருந்து  திமுகவை சேர்ந்த கனிமொழி, இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி.ராஜா, அதிமுகவைச் சேர்ந்த வி. மைத்ரேயன், ஆர்.லட்சுமணன், டி.ரத்தினவேல், கே.ஆர்.அர்ஜுனன் ஆகிய 6 பேர் தற்போது மாநிலங்களவை உறுப்பினர்களாக உள்ளனர். மக்களவை எம்பியான பின் மாநிலங்களைவை பதவியை கனிமொழி ராஜினாமா செய்தார். மீதமுள்ள 5 பேரின் பதவிக்காலம் வருகிற ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைகிறது. தேர்தல், வேட்பு மனு தொடர்பான முக்கிய நாட்கள் இதையடுத்து, காலியாக உள்ள 6 இடங்களுக்கான தேர்தல் வருகிற ஜூலை 18ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி,*வருகிற ஜூலை 1ம் தேதி வேட்புமனுதாக்கல் தாக்கல் தொடங்குகிறது. *வருகிற ஜூலை 8ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்.* ஜூலை 9ம் தேதி வேட்புமனுக்கள்  பரிசீலனை செய்யப்படும். *ஜூலை 11ம் தேதி வேட்பு மனுக்களை திரும்ப பெற்றுக்கொள்வதற்கான கடைசி நாள். *ஜூலை 18ம் தேதி வாக்குப்பதிவு காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை நடைபெறும் *ஜூலை 18ம் தேதி மாலை 5 மணிக்கு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 இடங்களில் அதிமுகவும், 3 இடங்களில் திமுகவும் வெற்றி பெற வாய்ப்பு மாநிலங்களவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 245 ஆகும். மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவி காலம் ஆறு ஆண்டுகள் ஆகும். இதில் 12 நியமன உறுப்பினர்கள் ஆவர்.  தமிழகத்தில் இருந்து சுமார் 18 பேர் மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.  தமிழகத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 235 ஆகும். அதில் ஒருவர் நியமன உறுப்பினர் ஆவர். தமிழகத்தில் இருந்து ஒரு மாநிலங்களவை உறுப்பினரை தேர்ந்தெடுப்பதற்கு சுமார் 34 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தேவை. மேலும் திமுக கூட்டணிக்கு சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 110 ஆகவும், அதிமுக கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 122 ஆகவும் உயர்ந்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை எம்பி.க்கள் இடத்தில், 3 இடங்களில் அதிமுகவும், 3 இடங்களில் திமுகவும் வெற்றிபெற வாய்ப்பு உள்ளது. கீழே உள்ள ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவி காலம் நிறைவடைகிறது. 1. கனிமொழி (திமுக)... ராஜினாமா 2. கே.ஆர்.அர்ஜூனன் (அதிமுக).3. டாக்டர். வி.மைத்ரேயன் (அதிமுக).4. டி.ராஜா (சிபிஐ).5. டாக்டர்.ஆர்.லட்சுமணன் (அதிமுக).6. டி.ரத்தினவேல் (அதிமுக).

மூலக்கதை