ராவல்பிண்டி ராணுவ மருத்துவமனையில் குண்டுவெடிப்பு: தீவிரவாதி மசூத் அசார் படுகாயம்?

தமிழ் முரசு  தமிழ் முரசு
ராவல்பிண்டி ராணுவ மருத்துவமனையில் குண்டுவெடிப்பு: தீவிரவாதி மசூத் அசார் படுகாயம்?

ராவல்பிண்டி: பாகிஸ்தானில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பின் தலைவர் மசூத் அசார் காயம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் கடந்த காலங்களில் நடைபெற்ற பல்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்ட  ஜெய்ஷ் இ முகம்மது தீவிரவாத இயக்கத்தின்  தலைவரான மசூத் அசார், சமீபத்தில் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டான்.

பாகிஸ்தானில் சுதந்திரமாக இருக்கும் இவன்,  உடல் நலக்குறைவு காரணமாக ராவல்பிண்டியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் ‘டயாலிசிஸ்’ சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில், ராவல்பிண்டி மருத்துவமனையில் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றதாகவும், இந்த தாக்குதலில் மசூத் அசார் உள்பட 10 பேர் காயம் அடைந்தாக தகவல் வெளியாகியுள்ளது. இதுெதாடர்பாக, பாகிஸ்தானில் உள்ள பிரபல சமூக ஆர்வலரும், மனித உரிமைகள் ஆர்வலருமான ஆசன் உல்லா மியாகைல் என்பவர் தனது டுவிட்டர் பதிவில், ‘மசூத் அசார் காயம் அடைந்துள்ளார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இருந்தும், மசூத் அசார் காயம் அடைந்தது தொடர்பான எவ்வித செய்திகளை வெளியிடக்கூடாது என்று அந்நாட்டு ஊடகங்களுக்கு பாகிஸ்தான் அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இச்சம்பவம் குறித்து தகவல் அளிக்க பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் மறுத்து விட்டனர்.   இந்த தகவல்களை உறுதி செய்யும் முயற்சியில் இந்திய உளவுத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பான வீடியோவும் வெளியாகி உள்ளது. அதில், குண்டுவெடிப்பு நடந்து அதன் கறும்புகையும், ெவடி சத்தமும் கேட்கிறது.

இருந்தும், பாகிஸ்தான் மீடியாக்கள் தீவிரவாதி மசூத் அசார் தொடர்பான எவ்வித செய்திகளையும் வெளியிடவில்லை.

.

மூலக்கதை