இலங்கை வெடிகுண்டு தாக்குதலில் பெற்றோரை பறிகொடுத்து தவிக்கும் 179 பிள்ளைகள்

தினகரன்  தினகரன்
இலங்கை வெடிகுண்டு தாக்குதலில் பெற்றோரை பறிகொடுத்து தவிக்கும் 179 பிள்ளைகள்

கொழும்பு:  இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் 176 பிள்ளைகள் பெற்றோரை இழந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21ம் தேதி 3 தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் என 7 இடங்களில் தீவிரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர். இதில், 258 பேர் உயிரிழந்தனர். 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவங்களில் 176 சிறுவர்கள் பெற்றோரை இழந்துள்ளதாக கத்தோலிக்க தேவாலய தலைவர் கார்டினர் மால்காம் ரஞ்சித் குறிப்பிட்டுள்ளதாக அந்நாட்டின் டெய்லி மிரர் என்ற பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது. நேற்று முன்தினம் வெளியான இது தொடர்பான செய்தியில், இலங்கை கத்தோலிக்க தேவாலய தலைவர் கர்டினல் மால்காம் ரஞ்சித் கடந்த வாரம் ரோம் நகருக்கு சென்றிருந்தார். அப்போது அவர் கூறுகையில், ‘176 சிறுவர்கள் தாய், தந்தை அல்லது இருவரில் ஒருவரை ஏப்ரல் 21ல் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் இறந்துள்ளனர். அவர்கள் அதில் இருந்து மீளவும், இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்காகவும் தேவாலயம் உதவிகளை செய்து வருகின்றது. சேதமடைந்த தேவாலயங்களை திரும்ப கட்டும் பணிகளை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது,’ என்று கூறியுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலக்கதை