இந்திய டிரைவர் அமெரிக்காவில் பலி

தினமலர்  தினமலர்
இந்திய டிரைவர் அமெரிக்காவில் பலி

வாஷிங்டன், அமெரிக்காவில் நடந்த சாலை விபத்தில், இந்தியாவை சேர்ந்த கார் டிரைவர் உயிரிழந்தார்.தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தை சேர்ந்தவர், சையத் வசீம் அலி, 26. இவர், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள, ப்ரீமான்ட் என்ற இடத்தில் வசித்து வந்தார். இங்கு, 'டாக்சி டிரைவராக' பணியாற்றினார்.இந்நிலையில், செலா ஹென்ரிக் என்ற பயணியை ஏற்றிக் கொண்டு, சான் பிரான்சிஸ்கோ பகுதியில், காரில் சென்று கொண்டிருந்தார்.அப்போது, அதிவேகமாக வந்த, 'மெர்சிடிஸ் பென்ஸ்' கார், வசீம் ஓட்டி வந்த, 'டொயோட்டா' கார் மீது பயங்கரமாக மோதியது.இதில், வசீம் மற்றும் செலா ஹென்ரிக் ஆகியோர் பலியாகினர். 'பென்ஸ்' காரை ஓட்டி வந்த டிரைவர் தலைமறைவாகிவிட்டார். அதில் பயணம் செய்த இருவர், காயங்களுடன் தப்பினர்.இந்திய குழந்தை பலி!இந்தியாவை சேர்ந்த முஸ்லிம் மதகுரு ஒருவர், வளைகுடா நாடுகளில் ஒன்றான, ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயில், ஒரு மசூதியில் பணியாற்றி வருகிறார். இவர், சமீபத்தில், குடும்பத்துடன் காரில் சென்ற போது விபத்தில் சிக்கினார். இதில், இவரும், இவரது மனைவியும் உயிர் தப்பினர். படுகாயம் அடைந்த இவரது இரண்டு வயது மகள், உயிரிழந்தார்.

மூலக்கதை