இங்கிலாந்தின் அடுத்த பிரதமர் யார்?: ஜூலை 23-ல் தெரியும்

தினமலர்  தினமலர்
இங்கிலாந்தின் அடுத்த பிரதமர் யார்?: ஜூலை 23ல் தெரியும்

லண்டன், இங்கிலாந்தின் அடுத்த பிரதமர் யார் என்பது குறித்து ஜூலை 23-ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பிலிருந்து விலகும் மசோதாவிற்கு , பார்லிமென்டில் மூன்று முறை ஒப்புதலை பெற முடியாமல் போனதால், தன் பதவியை தெரசா மே, கடந்த 8-ம் தேதி ராஜினாமா செய்தார். புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும் வரை, அவர் தற்காலிக பிரதமராக பதவியில் தொடர்வார் என, அறிவிக்கப்பட்டுள்ளது


இந்நிலையில் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரையும், நாட்டின் புதிய பிரதமரையும் தேர்வு செய்யும் பணிகள் தீவிரமடைந்து வருகின்றன. இதில் முன்னாள் அமைச்சர் போரிஸ் ஜான்சன், அநாட்டின் தூதரக அதிகாரி ஜெர்மி ஹன்ட் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் பிரதமர் ஆகும் ஆசையில் உள்ளனர்.
இந்நிலையில்,இங்கிலாந்தின் அடுத்த ஆளும்கட்சியின் தலைவர் மற்றும் பிரதமர் யார்? என்பது ஜூலை 23-ம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பின்னர் நாட்டின் பிரதமராக அங்கீகரிக்கும் உத்தரவை ராணி பிறப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை