மீடியா விமர்சனங்களால் தூங்கக் கூட முடியவில்லை: தற்கொலை முடிவுக்கு சென்றேன்!,......பாக். பயிற்சியாளர் பரபரப்பு பேட்டி

தமிழ் முரசு  தமிழ் முரசு
மீடியா விமர்சனங்களால் தூங்கக் கூட முடியவில்லை: தற்கொலை முடிவுக்கு சென்றேன்!,......பாக். பயிற்சியாளர் பரபரப்பு பேட்டி

லண்டன்: ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியை தழுவிய பாகிஸ்தான் அணி, தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றி கண்டுள்ளது. தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் கூறுகையில், ‘‘தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில், ஹாரிஸ் 59 பந்துகளில் 89 ரன்கள் அடித்துள்ளார்.

எதற்காக பாகிஸ்தான் வீரர்களை பற்றி மட்டும் எதிர்மறையாகவே பேசுகிறீர்கள்? இது ஹாரிஸ் சொஹைலின் மிகச்சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்று. எப்போதும் எங்கள் அணியை பற்றி எதிர்மறையாகவே எழுதாமல் ஒரு மாற்றத்திற்கு நேர்மறையாகவும் எழுந்துங்கள்’’ என்றார்.

மேலும், ‘‘இந்திய அணியுடனான போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியை சந்தித்ததால் கடந்த ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணமே எனக்கு தோன்றிவிட்டது.

நான் அவ்வளவு சிக்கலுக்கும், மன வருத்ததிற்கும் உள்ளானேன். இருந்தாலும் இது வெறும் ஒரு போட்டி மட்டுமே ஒரு போட்டியில் தோல்வியடைந்துவிட்டால் எதுவும் ஆகி விடாது என்பதை நினைத்து சமாதானம் ஆனேன்.

பாகிஸ்தான் அணியின் வீரர்களும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகினர்.

மீடியாக்கள், சமூக வலைதளங்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருவதால் வீரர்களால் சரியாக தூங்க கூட முடியவில்லை’’ என்று கூறினார்.

.

மூலக்கதை