திருவல்லிக்கேணியில் புத்தாண்டு கொண்டாடியவர்களை அடித்த காவல் ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு

தினகரன்  தினகரன்
திருவல்லிக்கேணியில் புத்தாண்டு கொண்டாடியவர்களை அடித்த காவல் ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு

சென்னை: திருவல்லிக்கேணியில் புத்தாண்டு கொண்டாடியவர்களை அடித்த காவல் ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு செய்ய எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புத்தாண்டு அன்று திருவல்லிக்கேணி காவல் நிலையம் வழியாக இருசக்கர வாகனத்தில் சதிஷ், பூவராகவன், நிதிஷ்குமார் ஆகியோர் சென்றனர். அப்போது, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர் மோகன்தாஸ் மூன்று பேரையும் காவல் நிலையம் அழைத்து சென்று வழக்குப்பதிவு செய்துள்ளார். அதுமட்டுமல்லாது அவர்கள் மூவரையும் காவல் ஆய்வாளர் தாக்கியுள்ளார். ஆனால், காவல் ஆய்வாளர் மீது திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகாரளித்தும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.

மூலக்கதை