பாக்.,க்கு ரூ.21 ஆயிரம் கோடி உதவி

தினமலர்  தினமலர்
பாக்.,க்கு ரூ.21 ஆயிரம் கோடி உதவி

இஸ்லாமாபாத் : அண்டை நாடான பாகிஸ்தான் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. அதைத் தொடர்ந்து தங்களுக்கு உதவும்படி பாக். பல்வேறு நாடுகளை கேட்டுக் கொண்டது. சீனா, யு.ஏ.இ. எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா ஆகியவை உதவுவதாக அறிவித்துள்ளன. இந்நிலையில் மத்திய கிழக்கு நாடான கத்தார் 21 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு உதவி புரிவதாக அறிவித்துள்ளது. இவை பாக். ரிசர்வ் வங்கியில் முதலீடாகவோ அல்லது கடனாகவோ வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை