உலக கோப்பை: விலகினார் ரசல் | ஜூன் 24, 2019

தினமலர்  தினமலர்
உலக கோப்பை: விலகினார் ரசல் | ஜூன் 24, 2019

லண்டன்: விண்டீஸ் அணியின் ஆன்ட்ரி ரசல், முழங்கால் காயம் காரணமாக உலக கோப்பை தொடரில் இருந்து பாதியில் விலகினார்.

இங்கிலாந்தில், ஐ.சி.சி., உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் விளையாடி வரும் விண்டீஸ் அணியில் ‘ஆல்–ரவுண்டர்’ ஆன்ட்ரி ரசல் இடம் பிடித்திருந்தார். சமீபத்தில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியின் போது இவரது முழங்காலில் காயம் ஏற்பட்டது. இதனால் இவர், நியூசிலாந்துக்கு எதிராக விளையாடவில்லை. காயம் முழுமையாக குணமடைய நீண்ட நாட்கள் ஆகும் என்பதால், உலக கோப்பை தொடரில் இருந்து பாதியில் விலகினார். இவர், 4 போட்டியில், 36 ரன், 5 விக்கெட் கைப்பற்றி உள்ளார்.

ரசலுக்கு பதிலாக ‘டாப்–ஆர்டர்’ பேட்ஸ்மேன் சுனில் அம்ப்ரிஸ் 26, தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் அயர்லாந்தில் நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடரில் அயர்லாந்துக்கு எதிராக 148 ரன்கள் குவித்த இவர், இதுவரை 6 ஒருநாள் போட்டிகளில் (316 ரன்) விளையாடி உள்ளார்.

உலக கோப்பையில் விளையாட அம்ப்ரிசுக்கு ஐ.சி.சி., அனுமதி அளித்துள்ளது. இதனால் இவர், வரும் 27ல் மான்செஸ்டரில் நடக்கவுள்ள இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு முன், விண்டீஸ் அணியில் இணைந்துவிடுவார்.

மூலக்கதை