விழுப்புரம் ஏஎஸ்பி வீட்டில் 2வது முறையாக திருட்டு

தினகரன்  தினகரன்
விழுப்புரம் ஏஎஸ்பி வீட்டில் 2வது முறையாக திருட்டு

விழுப்புரம்: விழுப்புரம் மதுவிலக்குபிரிவு கூடுதல் எஸ்பி முகிலன். கலெக்டர் அலுவலக பின்புறம் உள்ள இ.எஸ் கார்டன் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் சென்னையில் உறவினர்களை பார்ப்பதற்காக சென்ற  அவர் நேற்று வீடு திரும்பினார். அப்போது முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. போலீசார்  சென்று விசாரணை நடத்தினர். பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக்கிடந்தன. ஆனால் நகை, பணம் எவ்வளவு திருட்டு போயிருந்தது என்ற  தகவலை வெளியிட மறுத்துவிட்டனர். கடந்த ஆண்டு இதே போல் முகிலன் வீட்டை உடைத்து நகை, பணம் திருடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை