ஆப்கானிஸ்தானில் ராணுவ வீரர்கள் அதிரடி தாக்குதல்: 51 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

தினகரன்  தினகரன்
ஆப்கானிஸ்தானில் ராணுவ வீரர்கள் அதிரடி தாக்குதல்: 51 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காபூல்: ஆப்கானிஸ்தானில் ராணுவ வீரர்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் 51 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.  ஆப்கானிஸ்தான் நாட்டின் வடகிழக்கு பகுதியில் தலீபான்கள் மற்றும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் அவர்களை அடக்க ஆப்கானிஸ்தான் ராணுவம் போராடி வருகிறது. இந்நிலையில் குனர் மாகாணத்தில் ராணுவ படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். தலீபான்கள் மற்றும் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து ராணுவ வீரர்கள் அதிரடி தாக்குதல் நடத்தினர்.இந்த தாக்குதலில் 51 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.  அதாவது; 35 தலீபான் பயங்கரவாதிகளும், 16 ஐ.எஸ். பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் பயங்கரவாதிகளின் பதுங்கி குழிகள், ஆயுத கிடங்குகள் நிர்மூலமாக்கப்பட்டன. மேலும் இப்பகுதியில் பயங்கரவாதிகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடைப்படையில் தொடர்ந்து ராணுவ வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதனை தொடர்ந்து அப்பொகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

மூலக்கதை