பாக்.,கில் குண்டுவெடிப்பு: பயங்கரவாதி மசூத் அசார் காயம்?

தினமலர்  தினமலர்
பாக்.,கில் குண்டுவெடிப்பு: பயங்கரவாதி மசூத் அசார் காயம்?

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின், ராவல்பிண்டியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில், அங்கு சிகிச்சை பெற்று வந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசார் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து தகவல் அளிக்க பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் மறுத்து விட்டனர். இந்திய உளவுத்துறையினரும் உறுதிப்படுத்த மறுந்துவிட்டனர். ஆனால், மசூத் அசார் உட்பட 10 பேர் காயமடைந்துள்ளதாக, அந்நாட்டு ராணுவ அதிகாரி ஒருவர் சமூக வலைதளத்தில் கூறியுளளார். குண்டுவெடிப்பு குறித்து செய்தி வெளியிட மீடியாக்களுக்கு பாகிஸ்தான் ராணுவம் கடும் கட்டுப்பாடு விதித்துள்ளது.



ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவனான மசூத் அசார், இந்த மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருகிறான். நேற்று (ஜூன் 24) இந்த மருத்துவமனையில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. இதனை தொடர்ந்து, அந்த மருத்துவமனையை ராணுவ வீரர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். உள்ளே செல்ல யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. பத்திரிகையாளர்களும் தடுத்து நிறுத்தப்பட்டனர்.



குண்டுவெடிப்பு குறித்து மனித உரிமை ஆர்வலர் ஒருவர் டுவிட்டரில், கூறியுள்ளதாவது. ராவல்பிண்டி மருத்துவமனையில் பயங்கர குண்டுவெடிப்பு. 10 பேர் காயமடைந்து அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இங்கு தான் ஜெய்ஷ் மு முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மவுலானா மசூத் அசார் அனுமதிக்கப்பட்டுள்ளான். மீடியா்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. செய்தி வெளியிட தடை செய்யப்பட்டுள்ளது எனக்கூறியுள்ளார்.

மூலக்கதை