ராம் ரஹீம் சிங்கிற்கு விவசாயம் செய்ய பரோல்

தினமலர்  தினமலர்
ராம் ரஹீம் சிங்கிற்கு விவசாயம் செய்ய பரோல்

சண்டிகர்: பலாத்கார வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு மாவட்ட நிர்வாகம் 42 நாள் பரோல் வழங்கியது.

ஹரியானாவில், சிர்சா நகரில், 'தேரா சச்சா சவுதா' அமைப்பின் தலைமையகம் உள்ளது. இதன் தலைவன், குர்மீத் ராம் ரஹீம் சிங்,.51 இரண்டு பெண் துறவியரை, பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், 2017-ம் ஆண்டு , 20 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து ஹரியானா மாநிலம் ரோத்தாக் நகரில் உள்ள சோனாரியா சிறையில் தண்டனை அனுபவிதது வந்தார்.


தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து அவனது ஆதரவாளர்கள், பயங்கர கலவரத்தில் ஈடுபட்டனர். பஞ்சாப், டில்லி மாநிலங்களில் நடந்த வன்முறையில், 35 பேர் உயிரிழந்தனர்.போலீஸ் வாகனங்கள் உட்பட, பொது சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன

இந்நிலையில் தனக்கு சொந்தமான நிலம் தரிசாக இருப்பதால் விவசாயம் செய்ய வேண்டும் எனவே தனக்கு பரோல் வழங்குமாறு கடந்த சில நாட்களுக்கு முன் விண்ணப்பித்தார்.சிறையில் இவரது நன்னடத்தையை கருத்தில் கொண்டு 42 நாட்கள் பரோல் வழங்கியது சிர்சா மாவட்டம்.


மூலக்கதை