கர்நாடகாவை தொடர்ந்து உபி.யில் காங்கிரஸ் கமிட்டி கலைப்பு

தினகரன்  தினகரன்
கர்நாடகாவை தொடர்ந்து உபி.யில் காங்கிரஸ் கமிட்டி கலைப்பு

புதுடெல்லி: கர்நாடகாவைத் தொடர்ந்து உபியிலும் காங்கிரஸ் கமிட்டியை கலைத்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி நடவடிக்கை எடுத்துள்ளது.  மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் கர்நாடகாவில் கடந்த 19ம் தேதி காங்கிரஸ் கமிட்டிகளை கட்சியின் தலைமை கூண்டோடு கலைத்தது. அதேபோன்று உபி மாநில காங்கிரஸ் கமிட்டி கூண்டோடு கலை க்கப்பட்டதாக அகில இந்திய காங்கிரஸ் பொது செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.நடைபெறவுள்ள 11 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பணிகளை மேற்பார்வையிட கிழக்கு, மேற்கு பகுதிகளுக்கு தலா 2 நபர்கள் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரான அஜய் குமார் லாலு, கிழக்கு பகுதி பொறுப்பாளராக சில காலம் செயல்படுவார் என்றும் மேற்கு பகுதிக்கான பொறுப்பாளரை சிந்தியா விரைவில் அறிவிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலின்போது கட்சியினர் மீது எழுந்த புகார்கள் தொடர்பாக விசாரிக்க 3 நபர் ஒழுங்குமுறை கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதாகவும் அறிக் கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலக்கதை