வர்த்தகத்தை விரிவு படுத்த கல்யாண் ஜூவல்லர்ஸ் 300 கோடி முதலீடு

தினகரன்  தினகரன்
வர்த்தகத்தை விரிவு படுத்த கல்யாண் ஜூவல்லர்ஸ் 300 கோடி முதலீடு

சென்னை: தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் தனது வர்த்தகத்தை விரிவு படுத்த, கல்யாண் ஜூவல்லர்ஸ் 300  கோடியை முதலீடு செய்ய உள்ளது. திருச்சூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கல்யாண் ஜூவல்லர்ஸ், தென்னிந்திய சந்தையில் புதிதாக 8 விண்பனையகங்களை திறக்க திட்டமிட்டுள்ளது. இதில் ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தலா 2, கேரளா மற்றும் தெலங்கானாவில் தலா 1 அடங்கும். இதுகுறித்து கூறிய கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டி.எஸ்.கல்யாணராமன், ‘‘கடந்த ஆண்டில் தென் பிராந்தியம் தவிர மற்ற பகுதிகளில் விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்தினோம். தொடர்ந்து, அசாம், ஜார்கண்ட் உட்பட 10 சந்தைகளி–்ல் நுழைந்தோம் என்றார். கல்யாண் ஜூவல்லர்ஸ் செயல் இயக்குநர் ரமேஷ் கல்யாணராமன் உடனிருந்தார்.  இதுதவிர, தூய்மை, உற்பத்தி தரம், மறு விற்பனை மற்றும் பரிமாற்ற மதிப்பு, உற்பத்தியில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின்தரம் ஆகியவற்றுக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் 4 நிலை காப்பீடு திட்டத்தையும் கல்யாண் ஜூவல்லர்ஸ் அளித்துள்ளது.

மூலக்கதை