அமெரிக்காவிற்கு புதிய ராணுவ அமைச்சர்

தினமலர்  தினமலர்
அமெரிக்காவிற்கு புதிய ராணுவ அமைச்சர்

சென்னை, தமிழகம், ஆந்திராவை ஒட்டிய வடக்கு வங்க கடல் பகுதியில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதனால், சென்னை உள்ளிட்ட இடங்களில் துாறல் பெய்யலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.தமிழகத்தில், வெயிலின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையிலும், மற்ற மாவட்டங்களிலும், வெயிலின் அளவு, சராசரியாக, 40 டிகிரி செல்ஷியஸாக உள்ளது. வேலுார், திருத்தணி, சென்னை விமான நிலைய பகுதி, மதுரை உள்ளிட்ட இடங்களில் தினமும், 40 டிகிரி செல்ஷியசுக்கும் அதிகமான வெயில் கொளுத்துகிறது.வடக்கு மற்றும் வடமேற்கு வங்க கடல் பகுதியில், இரண்டு நாட்களில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என, இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துஉள்ளது. தென்மேற்கு பருவ மழை வங்க கடல் வழியே, கிழக்கு மற்றும் வட கிழக்கு மாநிலங்களுக்கும், விரிவடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.இதன் முன்னோட்டமாக, வங்கக் கடலின் வடக்கு மற்றும் வட மேற்கு பகுதியை ஒட்டி, இரண்டு நாட்களில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என, கணிக்கப்பட்டுள்ளது.இந்த காற்றழுத்த பகுதிக்காக, மேக கூட்டங்கள் நகர்ந்து செல்லும் போது, சென்னை மற்றும் வட மாவட்டங்களில், அவ்வப் போது, லேசான மழை பெய்யலாம். அதேபோல், காற்றழுத்த தாழ்வு பகுதி, தமிழகத்தை ஒட்டி வந்தால், கடலுார் முதல் ஆந்திரா வரையிலும், கடலோர பகுதிகளில், மிதமான மழைக்கு வாய்ப்பு ஏற்படும் என, வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.இன்று வெயில்: நாளை மழைதிருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், வேலுார், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலுார், நாகப்பட்டினம், மதுரை, அரியலுார், பெரம்பலுார், திருச்சி ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும், இன்று வெயில் வாட்டும். நாளை முதல் இரண்டு நாட்களுக்கு, மாநிலத்தின் சில இடங்களில், கனமழை பெய்யலாம் என, வானிலை மையம் கணித்துள்ளது. நேற்று காலை, 8:30 மணி நிலவரப் படி, 24 மணி நேரத்தில், நீலகிரி மாவட்டத்தில், 3 செ.மீ., - பெரியகுளத்தில், 1 செ.மீ., மழை பெய்து உள்ளது.நேற்று மாலை, 5:30 மணி நிலவரப்படி, தமிழகத்தில் அதிகபட்சமாக, திருத்தணியில், 42 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவானது. சென்னை, மதுரை, வேலுார், நாகையில், 41; திருச்சி மற்றும் காரைக்காலில், 40 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவானது. குறைந்தபட்சமாக, குன்னுார், 24, கொடைக்கானல், 21 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவானது.

மூலக்கதை