விஜய்சங்கர் காயம்: களம் காணுவார் ரிஷப்?

தினகரன்  தினகரன்
விஜய்சங்கர் காயம்: களம் காணுவார் ரிஷப்?

சவுத்தாம்ப்டன்: உலக கோப்பைக்கான இந்திய அணியில் தமிழக வீரர் ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் இடம் பெற்றுள்ளார். அவருக்கு முதல் 3 போட்டிகளில் வாய்ப்பு கிடைக்கவில்லை. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஷிகர் தவான் காயம் காரணமாக ஒய்வு தரப்பட விஜய் சங்கருக்கு வாய்ப்பு கிடைத்தது . அதில் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்து அசத்தினார். ஆக அந்தப் போட்டியில்  2 விக்ெகட், ஒரு கேட்ச், ஆட்டமிழக்காமல் 15 ரன்கள்  என அசத்தியிருந்தார். இந்நிலையில்  புதன்கிழமை இந்திய அணியினர் சவுத்தாம்ப்டனில் பயிற்சி மேற்கொண்டிருந்தனர். அப்போது ஜஸ்பிரித் பும்ரா வீசிய  யாக்கர்  விஜய் சங்கரின் கால் விரல்களை பதம் பார்த்தது. அதனால் அவர் வலியால் அவதிப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் ‘பயப்படும்படி ஏதுமில்லை’ என்று அணி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். ஆனால்  நாளை ஆப்கானிஸ்தானுடன் நடைபெறும் போட்டியில் விஜய் சங்கர் இடம் பெறுவாரா என்பது குறித்து இதுவரை தகவல் ஏதுமில்லை. அதே நேரத்தில் விஜய் சங்கருக்கு பதில் 4வது வீரராக ரிஷப் பண்டை விளையாட வைக்கும் முடிவில் பிசிசிஐ இருப்பதாக கூறப்படுகிறது. அம்பாதி ராயுடுவும் வாய்ப்பு பட்டியலில் இருக்கிறார். ஏற்கனவே புவனேஷ்வர் குமார் காயம் காரணமாக கடந்த போட்டியில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது. எனவே அவருக்கு பதில் கலீல் அகமது, இஷாந்த் சர்மா ஆகியோரை அணியில் சேர்க்கலாமா என்றும் ஆலோசனை நடக்கிறது. ஏற்கனேவ 15 பேர் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடஜா, முகம்மது ஷமி ஆகியோருக்கு இதுவரை வாய்ப்பு தரப்படவில் லை.

மூலக்கதை