கோபா கால்பந்து

தினகரன்  தினகரன்
கோபா கால்பந்து

தென் அமெரிக்க நாடுகளுக்கு இடையிலானா ‘கோபா’ கால்பந்து போட்டி பிரேசிலில்  நடக்கிறது. நேற்று நடைப்பெற்ற லீக் போட்டி ஒன்றில் அர்ஜென்டீனா - பராகுவே அணிகள் மோதின. போட்டியன் 37வது நிமிடத்தில் ரிச்சர்ட் சான்செஸ் முதல் கோலை அடிக்க பராகுவே 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. தொடர்ந்து பாதியில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை அர்ஜென்டீனாவின் லியோனல் மெஸ்ஸி கோலாக மாற்றினார். அதன்பிறகு இரண்டு அணிகளும் கோலடிக்க மேற்கொண்ட முயற்சிகள் பலனிக்கவில்லை. அதனால் அர்ஜென்டீனா-பராகுவே அணிகள் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்தன. முன்னதாக நடைப்பெற்ற லீக் போட்டி ஒன்றில் கொலம்பியா அணி 1-0 னெ்ற கோல் கணக்கில்  கத்தாரை வென்றது. அதேபோல் பெரு 3-1 என்ற கோல் கணக்கில் பொலிவியாவை வீழ்த்தியது. பிரேசில்-வெனிசுலா இடையிலான போட்டி கோலின்றி டிராவில் முடிந்தது.

மூலக்கதை