சபரிமலை விவகாரத்தில் சட்டம்; கேரள அரசு கோரிக்கை

தினமலர்  தினமலர்
சபரிமலை விவகாரத்தில் சட்டம்; கேரள அரசு கோரிக்கை

திருவனந்தபுரம்: 'சபரிமலை விவகாரத்தில், மத்திய அரசு, சட்டம் கொண்டு வர வேண்டும்' என, கேரளாவை ஆளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு, கோரிக்கை விடுத்துள்ளது.


சபரிமலையில், 10 - 50 வயது பெண்களுக்கு அனுமதி இல்லாத, பாரம்பரிய முறையை, உச்ச நீதிமன்றம், கடந்த ஆண்டு தகர்த்தது. அனைத்து வயதினரும் சபரிமலை சென்று, அய்யப்பனை வழிபடலாம் என, உத்தரவிட்டது.

இந்நிலையில், கேரள மாநில தேவசம் போர்டு அமைச்சர், கடகம்பள்ளி சுரேந்திரன், ''சபரிமலை விவகாரம் குறித்து, மத்திய அரசு சட்டம் கொண்டு வர வேண்டும்; உச்சநீதிமன்ற உத்தரவுக்கு, சட்ட பாதுகாப்பு அளிக்க வேண்டும்,'' என, கோரிக்கை விடுத்துள்ளார்.

மூலக்கதை