குற்ற சம்பவங்களை கண்காணிக்க ரோபோ

தினமலர்  தினமலர்
குற்ற சம்பவங்களை கண்காணிக்க ரோபோ

கலிபோர்னியா, அமெரிக்காவில் குற்ற சம்பவங்களை கண்காணிக்கும் பணியில் ரோபோக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.கலிபோர்னியா மாகாணத்தில் 'ஹன்டின்டன்' பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வதால், குற்றச் செயல்களை கண்காணித்து, அதுகுறித்த தகவல்களை போலீஸ் தலைமையகத்துக்கு அனுப்ப, எச்.பி.ரோபோ காப் என்ற ரோபோ ஈடுபடுத்தப்பட்டுள்ளது. நான்கு புறமும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள இந்த ரோபோ, பூங்காவுக்கு வருவோரிடம், 'தயது செய்து வழிவிடுங்கள், இன்று நல்ல நாளாக அமையட்டும்' என்று கனிவாக பேசுவதால் எல்லாரையும் கவர்கிறது. இதைத் தொடர்ந்து கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள முக்கிய தெருக்களில் கண்காணிப்பு பணியில் ரோபோக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

மூலக்கதை