எதிர்க்கட்சி தலைவர் கூறும் ஒவ்வொரு வார்த்தையும் மதிப்பு மிக்கது: நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி பேச்சு

தினகரன்  தினகரன்
எதிர்க்கட்சி தலைவர் கூறும் ஒவ்வொரு வார்த்தையும் மதிப்பு மிக்கது: நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: தற்போதையை நாடாளுமன்ற கூட்டத்தொடர் சிறப்புக்குரியதாகும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜ 2வது முறையாக ஆட்சி அமைத்த பிறகு முதல் முறையாக, நாடாளுமன்றம் இன்று கூடுகிறது. அடுத்த மாதம் 26ம் தேதி நடைபெற உள்ள இதில், முத்தலாக் தடை மசோதா உட்பட 38  முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரமாக உள்ளது. அதே நேரம், பல்வேறு பிரச்னைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் மும்முரமாக உள்ளன.  மக்களவை தேர்தலில் பாஜ 303 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. பாஜ தலைமையிலான தே.ஜ கூட்டணி மொத்தம் 353 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 52 இடங்களிலும், இதன் தலைமையிலான  ஐ.மு. கூட்டணி மொத்தமாக 91 இடங்களிலும் வென்றன. இதர கட்சிகளும், கூட்டணிகளும் 98 இடங்களை பிடித்தன. காங்கிரசுக்கு  மக்களவையின் மொத்த பலத்தில் 10 சதவீத இடங்கள் (55) கிடைக்காததால் இந்த முறையும் அதிகாரப்பூர்வமாக  எதிர்க்கட்சி அந்தஸ்து பெற முடியாத நிலை உள்ளது. தேர்தல் வெற்றியை தொடர்ந்து, 57 மத்திய அமைச்சர்களுடன் கடந்த மாதம் 30ம் தேதி 2வது முறையாக பிரதமர் பதவியை நரேந்திர மோடி ஏற்றார். இந்த புதிய அரசின் முதல் நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்று  தொடங்குகிறது. 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று நடைபெறுவதை ஒட்டி நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுவதாவது; மக்கள் நலனுக்காக அனைவரும் இணைந்து பணியாற்றுமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.  நீண்ட காலத்துக்குப் பிறகு அதிக பெரும்பான்மையுடன் உள்ள அரசை மக்கள் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை வரவேற்கிறேன் என கூறினார். நாடாளுமன்ற கூட்டத்தோடரை சுமூகமாக நடத்த எதிர்கட்சிகள் ஒத்துழைப்பு தர வேண்டும். எதிர்க்கட்சி தலைவர் கூறும் ஒவ்வொரு வார்த்தையும் மதிப்பு மிக்கது. ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சிகள் ஜனநாயகத்துக்கு அவசியம் என்று பிரதமர் கருத்து தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் விவாதத்தையும் ஆலோசனைகளையும் வரவேற்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை