துபாயில் சோகம்: பஸ்சில் இறந்த கேரள சிறுவன்

தினமலர்  தினமலர்
துபாயில் சோகம்: பஸ்சில் இறந்த கேரள சிறுவன்

துபாய்: வளைகுடா நாடான துபாயில் பள்ளி பஸ்சில் சிறுவன் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவை சேர்ந்த பைசல் என்பவர் துபாயில் பெரும் தொழில்கள் நடத்தி வருகிறார்.
இவரது மகன் முகம்மது பர்கான் , அல்குவாஷ் பகுதியில் உள்ள இஸ்லாமிய பள்ளியில் பயின்று வந்தார். வழக்கம் போல் பஸ்சில் பள்ளிக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை. பள்ளிக்கு அழைத்து சென்ற போது பஸ்சில் இருந்து அனைவரும் இறங்கி விட்டனர். ஆனால் பர்கான் அரை தூக்க நிலையில் பஸ்சில் இருந்து இறங்கவில்லை, டிரைவரும் பஸ்சை பூட்டி சென்று விட்டார். பள்ளி முடிந்து மாணவர்களை வீடுகளுக்கு அழைத்து செல்ல வந்த போது சிறுவன் இறந்த நிலையில் கிடந்தார். இதனையடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மூலக்கதை