அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 28 பொருட்கள் மீதான வரி அதிகரிப்பு: இன்று காலை முதல் அமல்..!

தினகரன்  தினகரன்
அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 28 பொருட்கள் மீதான வரி அதிகரிப்பு: இன்று காலை முதல் அமல்..!

புதுடில்லி: அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும், 28 வகையான பொருட்களுக்கு, இந்தியாவில் சுங்க வரி உயர்த்தப்பட்டது. இன்று முதல் அமலுக்கு வந்தது. இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்ட பொருட்களுக்கு அமெரிக்க 25 விழுக்காடு வரையில் வரிகளை உயர்த்தியது. இதற்கு பதிலடியாக, இந்தியாவும், அமெரிக்க பொருட்கள் மீதான வரியை உயர்த்தி கடந்தாண்டு அறிவித்தது. அமெரிக்கா நடத்திய பேச்சுவார்த்தையால், அதனை நடைமுறைப்படுத்துவது  ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கும் இந்தியா, வெளியிட்டுள்ளது. இதில் அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு உயர்த்தப்பட்ட வரிவிதிப்பு, இன்று முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் எனத் தெரிவித்துள்ளது. முதலில் 29 பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்க மத்திய அரசு திட்டமிடப்பட்டது. அர்த்தீமியா என்ற இறால் வகை மட்டும் அதிலிருந்து நீக்கப்பட்டது. கூடுதல் வரி மூலம் 217 மில்லியன் டாலர் கூடுதல் வருமானம் இந்தியாவுக்கு கிடைக்கும். இந்தியாவின் அதிரடி நடவடிக்கையால், அமெரிக்க ஏற்றுமதியாளர்கள், தங்கள் பொருட்களுக்கு கூடுதல் வரியை செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். மேலும், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும், ஆப்பிள், பாதம் பருப்பு, அக்ரூட் பருப்புகள் உள்ளிட்ட 200 மில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களின், சுங்கவரி உயர்த்தப்பட்டிருப்பதால், இந்திய சந்தையில், அவற்றின் விலை உயர்ந்து, விற்பனையாகும் சூழல் ஏற்படக்கூடும்.

மூலக்கதை