புவனேஷ்வர் விலகல்

தினமலர்  தினமலர்
புவனேஷ்வர் விலகல்

மான்செஸ்டர்: பாகிஸ்தானுக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியிலிருந்து காயம் காரணமாக விலகினார் புவனேஷ்வர்.
இங்கிலாந்தில், 12வது ஐ.சி.சி., உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. மான்செஸ்டர் நகரில் நடக்கும் லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 336 ரன்கள் குவித்தது. கடின இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணிக்கு, 5வது ஓவரின் 4வது பந்தை வீசினார் வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர். அப்போது, இவரது இடது தொடையின் பின்பகுதியில் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து பவுலிங் செய்ய முடியவில்லை. மைதானத்திலிருந்து புவனேஷ்வர் வெளியேறினார். இவருக்குப்பதில் மீதமுள்ள இரண்டு பந்துகளை விஜய் சங்கர் வீசினார். புவனேஷ்வருக்குப்பதில் ஜடேஜா பீல்டிங்கில் ஈடுபட்டார். புவனேஷ்வரின் விலகல் இந்திய ரசிகர்களுக்கு வருத்தத்தை அளித்துள்ளது.

மூலக்கதை