நியூசிலாந்தில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு

தினமலர்  தினமலர்
நியூசிலாந்தில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு

வெலிங்டன்: நியூசிலாந்து நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிக்டர் அளவு கோலில் 7.4 ஆக பதிவாகி உள்ளது. தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நியூசிலாந்து நாட்டின் கெர்மடெக் தீவு பகுதியில் அந்நாட்டின் நேரப்படி காலை 9 மணிக்கு நில நடுக்கம் ஏற்பட்டதாகவும் ரிக்டர் அளவு கோலில் 7.4 ஆக பதிவானதாகவும் கூறப்படுகிறது.


மேலும் நியூசிலாந்து நாட்டை சேர்ந்த தீவு பகுதிகளான கெர்ம்டெக் பகுதியை சேர்ந்த ஆக்லாந்து மற்றும் டோங்கா ஆகிய இடங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் சுனாமி எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை