இந்தியா வெற்றி பெற வேண்டும்: பாக்., கேப்டன் உறவினர் விருப்பம்

தினமலர்  தினமலர்
இந்தியா வெற்றி பெற வேண்டும்: பாக்., கேப்டன் உறவினர் விருப்பம்

லக்னோ: உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற உள்ள போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டும் என பாக்., அணிகேப்டன் சர்பிரஸ் அகமதுவின் தாய்மாமா விருப்பம் தெரிவித்துள்ளார்.


கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா-பாக்., அணிகள் மோதும் போட்டி இன்று மான்ஸ் செஸ்டர் மைதானத்தில் நடக்க இருக்கிறது. இந்த போட்டியை காண்பதற்கான டிக்கெட் விற்பனை துவங்கிய சில நாட்களிலேயே முற்றிலுமாக தீர்ந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் பாக் அணியின் கேப்டன் சர்பிரஸ் அகமதுவின் தாய்மாமா மஹ்பூப் ஹசன் போட்டியில் இந்தியா வெற்றிபெற வேண்டும் என கூறி உள்ளார். உ.பி., மாநிலம் எட்டவா நகரில் வசித்து வருகிறார்.போட்டி குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேட்ட போது இன்று நடைபெற உள்ள போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டும் என விரும்புகிறேன் .அதே நேரத்தல் எனது மருமகன் சர்பிரஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணி நன்றாக விளையாட வேண்டும். மேலும் அவர் கேப்டனாக நீட்டிக்க வேண்டும் என விரும்புவதாக கூறினார்.

மூலக்கதை