பயங்கரவாதம் மிகப்பெரிய சவால் வெளியுறவு அமைச்சர் பேச்சு

தினமலர்  தினமலர்
பயங்கரவாதம் மிகப்பெரிய சவால் வெளியுறவு அமைச்சர் பேச்சு

துஷான்பே : ''ஆசியா கண்டம் சந்திக்கும் மிகப் பெரிய சவால், தீவிரவாதம் தான்,'' என, நம் வெளியுறவு அமைச்சர், ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

ஆசிய நாடுகள் இடையே அமைதி, பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில், சி.ஐ.சி.ஏ., எனப்படும், ஆசியாவில் பேச்சு மற்றும் நம்பிக்கை ஏற்படுத்தும் நடவடிக்கைகளுக்கான மாநாடு அமைப்பின், ஐந்தாவது கூட்டம், ஆசிய நாடான தஜிகிஸ்தானில் நடக்கிறது.இந்தக் கூட்டத்தில், சமீபத்தில், வெளியுறவு அமைச்சராக பொறுப்பேற்றுள்ள, முன்னாள் வெளியுறவுச் செயலர், ஜெய்சங்கர் பங்கேற்றார். பயங்கரவாதம் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, சர்வதேச அரங்குகளில், பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து முன் வைத்து வருகிறார்.

இந்நிலையில், தஜிகிஸ்தானில் நடந்த கூட்டத்தில், ஜெய்சங்கர் பேசியதாவது:ஆசியா சந்திக்கும் மிகப் பெரிய சவால், தீவிரவாதம் தான். இதை, இந்த அமைப்பில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் உணர்ந்துள்ளனர், சந்தித்துள்ளனர். பயங்கரவாதிகளுடன், பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களை எப்போதும் ஒப்பிட்டு பார்க்கக் கூடாது. பயங்கரவாதத்துக்கு எதிராக, அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

மூலக்கதை