உளவுத்துறை பகீர் எச்சரிக்கை அயோத்தியில் தாக்குதல் நடக்கலாம்

தினகரன்  தினகரன்
உளவுத்துறை பகீர் எச்சரிக்கை அயோத்தியில் தாக்குதல் நடக்கலாம்

லக்னோ: அயோத்தியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டி உள்ளனர் என்று மத்திய உளவுத்துறை எச்சரிக்ைக விடுத்துள்ளது.பாஜ இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், அயோத்தியில் ராமர்கோயில் உடனடியாக கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை அதன் கூட்டணிக் கட்சியான சிவசேனா எழுப்ப ஆரம்பித்துள்ளது. இதற்காக அக்கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, நாளை 18 எம்.பி.க்களுடன் அயோத்திக்கு செல்ல உள்ளார். இதேபோல  உத்தரப் பிரதேச துணை முதல்வர் கேசவ் மவுரியா நேற்று அங்கு வழிபாடு நடத்தினார். இந்நிலையில், அயோத்தியில் தற்போது மக்கள் அதிகம் கூடி வருவதால், அங்கு பஸ், ரயில் நிலையங்கள் மற்றும் முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்த பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பு திட்டமிட்டுள்ளது. இதேபோல் வேறு சில தீவிரவாத அமைப்புகளும் அங்கு தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளன. இதனால் அங்கு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து அயோத்தியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நகருக்கு வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.

மூலக்கதை