பாஜக சிறப்பான வெற்றிகளை பெற்று வருவதால், கட்சியின் தலைவராக அமித்ஷாவே தொடர்வார் : தேசிய நிர்வாக குழு முடிவு

தினகரன்  தினகரன்
பாஜக சிறப்பான வெற்றிகளை பெற்று வருவதால், கட்சியின் தலைவராக அமித்ஷாவே தொடர்வார் : தேசிய நிர்வாக குழு முடிவு

டெல்லி : அமித்ஷாவின் தலைமையில் தொடர்ந்து சிறப்பான வெற்றிகளை பெற்று வருவதால், இன்னும் 6 மாதங்களுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவே பா.ஜ., கட்சித் தலைவராக தொடர்வார் என்று பா.ஜ., தேசிய நிர்வாக குழு முடிவு செய்துள்ளது.டெல்லியில் அமித்ஷா தலைமையில் ஆலோசனைக் கூட்டம்பாஜகவிற்கு புதிய தலைவரை தேர்வு செய்வது உள்ளிட்டவை தொடர்பாக டெல்லியில் அமித்ஷா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  பாஜ தலைவராக இருந்த அமித் ஷா மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதை அடுத்து மத்திய உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்கு பாஜக தேசியத் தலைவர் பிறகு அமித்ஷா தலைமையில் முதன்முறையாக கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. அமித்ஷா கட்சி பதவியில் இருந்து விலகுவார் என்று எதிர்பார்ப்பு டெல்லியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் தேசிய செயற்குழு உறுப்பினர்கள், மாநில தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். தமிழகம் சார்பில் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய செயலாளர் எச் ராஜா ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இதில் மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தல் குறித்தும் மாநில பாஜக நிர்வாகிகள் தேர்தலை எப்போது நடத்துவது என்றும் விவாதிக்கப்பட்டது. பாஜக தேசிய தலைவராக உள்ள அமித்ஷா மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார். இதனால் ஒருவருக்கு ஒரு பதவி என்ற கட்சி கொள்கைப்படி அமித்ஷா கட்சி பதவியில் இருந்து விலகுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. தேசிய தலைவராக அமித்ஷா தொடருவார் இந்நிலையில் இந்த கூட்டத்தில் பேசிய தேசிய தலைவர் அமித்ஷா, 303 இடங்களில் வெற்றி பெற்ற போதும், தேர்தல் நடவடிக்கைகளில் கட்சி நிர்வாகிகளின் செயல்பாடு முழு திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என்று வருத்தம் தெரிவித்தார். அத்துடன் இந்த கூட்டத்தில் மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில், கட்சிக்கு புதிதாக உறுப்பினர்களை சேர்க்கும் பணியை பாஜக தொடங்கியுள்ளது. இதனிடையே பல்வேறு மாநிலங்களில் தேர்தல் நடக்கவிருப்பதால் பாஜக தேசிய தலைவராக அமித்ஷாவே தொடர அனைத்து மாநில தலைவர்கள் கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டுள்ளது.அமித்ஷா தலைமையில் பாஜக நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெற்றதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கட்சியின் புதிய தலைவர் வரும் 2020 ஜனவரியில் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக பா.ஜ., வட்டாரங்கள் கூறுகின்றன.

மூலக்கதை