5 கோடி சிறுபான்மை மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க மத்திய அரசு திட்டம்

தினகரன்  தினகரன்
5 கோடி சிறுபான்மை மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க மத்திய அரசு திட்டம்

டெல்லி: 5 கோடி சிறுபான்மை மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. சிறுபான்மை இன மாணவர்களை முன்னேற்றுவதற்கு உதவும் வகையில் கல்வி உதவித்தொகை வழங்கி ஊக்குவிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து சிறுபான்மையினர் விவகாரத்துறை மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி கூறுகையில், ஆண்டுக்கு 1 கோடி சிறுபான்மை இன மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த வகையில் 5 ஆண்டுகளில் 5 கோடிப்பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.பொதுப்பள்ளிக் கல்வித்திட்டத்துக்கும், மதப்பள்ளி கல்வித்திட்டத்துக்கும் இடையே உள்ள இடைவெளியை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மதப்பள்ளிக்கூடங்களில் இருந்தும், பொதுப்பள்ளிக்கூடங்களில் இருந்தும் இடையில் நின்ற மாணவிகளை கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் சேர்ப்பதற்கு ஏற்ற வகையில் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் இணைப்பு படிப்பு வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.2022-ம் ஆண்டில் இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்பது தொடர்பாக நிதி ஆயோக் ஒரு திட்டத்தை தீட்டி உள்ளது. அதில் சிறுபான்மையினருக்கு குறிப்பாக அந்த இன மாணவிகளுக்கு சமூக, பொருளாதார, கல்வி ஆகியவற்றில் அதிகாரம் வழங்க கவனத்தை செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலக்கதை