உலக கோப்பை கிரிக்கெட்: இன்று இந்தியாவுக்கு 3-வது சவால்

தினமலர்  தினமலர்
உலக கோப்பை கிரிக்கெட்: இன்று இந்தியாவுக்கு 3வது சவால்

நாட்டிங்காம்: உலக கோப்பை லீக்போட்டியில் இன்று இந்தியா-நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

இங்கிலாந்தில் உலக கோப்பை தொடர் நடக்கிறது இன்று நாட்டிங்காமில் நடக்கவுள்ள லீக் போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. முன்னதாக லீக் சுற்றில் தென்ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளை வீழ்த்திய உற்சாகத்தில் இந்திய அணி உள்ளதால் இன்று நடக்கவுள்ள போட்டியில் நியூசிலாந்தை சுலபமாக வெல்லும் என எதிர்பார்க்கலாம்.


துவக்க வீரர்களான ரோஹித் , ஷிகர் தவான் தலா ஒரு சதம் அடித்தனர். தற்போது இடது கை பெருவிரல் காயம் காரணமாக ஷிகர் தவான் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக லோகேஷ் ராகுல் துவக்க வீரராக களம் இறங்க உள்ளார்.

மைதானம் எப்படி


நாட்டிங்காம் மைதானத்தில் இதுவரை இந்திய அணி 6 போட்டிகளில் பங்கேற்று தலா 3வெற்றி ,3 தோல்வி பெற்றுள்ளது. நியூசிலாந்து அணியை பொறுத்தவரை 7 போட்டிகளில் 2 வெற்றி, 5 தோல்வியை அடைந்துள்ளது. இரு அணிகளும் இதுவரை மோதிய ஒரு போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது.

80 சதவீதம் மழைக்கு வாய்ப்புஇன்றைய போட்டிக்கு மழை மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. போட்டி நடக்கவுள்ள நாட்டிங்காம் பகுதியின் இன்றைய வெப்பநிலையை பொறுத்தவரை அதிகபட்சம் 12, குறைந்தபட்சம் 9 டிகிரி செல்சியாக இருக்கும். மழை வர 80 சதவீதம் வாய்ப்புள்ளது. அந்நாட்டுநேரப்படி மாலை 6 மணி வரை கனமழை இருக்கும் என்பதால் போட்டி முழுவதுமாக நடப்பது சந்தேகம்.

மூலக்கதை