தமிழகத்தின் எதிர்ப்பை மீறி, முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட கேரள அரசு ஆய்வு

தினகரன்  தினகரன்
தமிழகத்தின் எதிர்ப்பை மீறி, முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட கேரள அரசு ஆய்வு

திருவனந்தபுரம் : முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட ஆய்வுப் பணியை கேரள அரசு தொடங்கி உள்ளது. தமிழகத்தின் எதிர்ப்பை மீறி, முல்லைப் பெரியாறு அணையில் கேரள அரசு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. முல்லை பெரியாறில் புதிய அணைக்கு தமிழக அரசு எதிர்ப்பு முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கான தீவிர முயற்சியில் கேரள அரசு ஈடுபட்டு வருகிறது. மேலும் முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் வாகன நிறுத்த மையம் அமைக்கவும் முடிவு செய்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதுஇந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், வாகன நிறுத்த மைய கட்டுமானப் பணிகளை கேரள அரசு தொடங்கியுள்ளது. இதையடுத்து அணை கட்ட கேரள அரசுக்கு அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு விசாரணை ஜூலை மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அணையின் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து ஆய்வு மேற்கொள்ள கடந்த அக்டோபர் மாதம் மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அனுமதி அளித்தது.ஆனால் பெரியாறு புலிகள் சரணாலயத்துக்கு உட்பட்ட பகுதி என்பதால் கேரள மாநில வனத்துறையின் அனுமதி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இது தொடர்பான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது ஆய்வுக்கான அனுமதியை வனத்துறை தலைமை காப்பாளர் வழங்கியுள்ளார். முல்லைப் பெரியாறு அணையில் கேரள அரசு ஆய்வு இந்நிலையில் முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட ஆய்வுப் பணியை கேரள அரசு தொடங்கி உள்ளது. தமிழகத்தின் எதிர்ப்பை மீறி, முல்லைப் பெரியாறு அணையில் கேரள அரசு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. செக்கான்தரபாத்தை சேர்ந்த பிரகதி லேப் என்கிற தனியார் நிறுவனம் ஆய்வினை மேற்கொண்டு உள்ளது. கேரள மாநிலத்தைச் சேர்ந்த நீர்வளத்துறை அதிகாரிகளும் உடன் உள்ளனர். ஆண்டின் நான்கு பருவங்களிலும் சுற்றுச்சூழல் பாதிப்பு எப்படி இருக்கும் என ஆய்வு நடத்தி வருகின்றனர்.  அதன் அடிப்படையில் புதிய அணை கட்டுவது தொடர்பான திட்டம் வகுக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

மூலக்கதை