விடுதலை சிறுத்தைகள் கட்சி மீது தொடர்ந்து அவதூறு பரப்பும் ராமதாஸ் மீது வழக்கு தொடரப்படும்: திருமாவளவன்

தினகரன்  தினகரன்
விடுதலை சிறுத்தைகள் கட்சி மீது தொடர்ந்து அவதூறு பரப்பும் ராமதாஸ் மீது வழக்கு தொடரப்படும்: திருமாவளவன்

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி மீது தொடர்ந்து அவதூறு பரப்பும் ராமதாஸ் மீது வழக்கு தொடரப்படும் என திருமாவளவன் பேட்டியளித்தார். தமிழக சட்டமன்றத்தை உரிய காலத்தில் கூட்ட வேண்டும் எனவும் கூறினார். ஆபாச வலைதளங்களை மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும் எனவும், சமூக வலைதளங்களை பயன்படுத்துவதில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். ராஜராஜா சோழன் மட்டுமல்ல, தமிழகத்தை ஆண்ட எல்லா மன்னர்களும் சனாதன சக்திகளுக்கு துணை நின்றார்கள் என்று கூறினார். 

மூலக்கதை