முறைகேடுகள் எதிரொலி நிறுவன இயக்குநர்கள் பதவிக்கு இனி தேர்வு எழுத வேண்டும்: மத்திய அரசு அதிரடி

தினகரன்  தினகரன்
முறைகேடுகள் எதிரொலி நிறுவன இயக்குநர்கள் பதவிக்கு இனி தேர்வு எழுத வேண்டும்: மத்திய அரசு அதிரடி

புதுடெல்லி: கார்ப்பரேட் நிறுவனங்களில் கம்பெனி ஆட்சிக் குழுவில் இடம்பெறும் தன்னாட்சி இயக்குநர்கள், அவர்களது நியமனத்திற்கு முன்பு அரசு நடத்தும் ஆன்லைன் தேர்வை எழுத வேண்டும் என்று மத்திய அரசின் கம்பெனி  விவகார செயலாளர் இன்ஜெட்டி னிவாஸ் தெரிவித்தார்.  வங்கியில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச்செலுத்தாமல் ஏமாற்றிய டிராய்ட்டி ஹாஸ்கின்ஸ் அன்ட் செல்ஸ் நிறுவனத்தின் கணக்கு தணிக்கை அறிக்கைக்கு வங்கிகள் ஒழுங்குமுறை ஆணையம் தடை விதித்தது. இதுபோன்ற மோசடிகள் கடந்த  ஆட்சி காலத்தில் பெரும் பிரச்னையை ஏற்படுத்தின. நகை வியாபாரி ஒருவர் பொய்யான கணக்கு விவரங்களை தாக்கல் செய்து வங்கியில் 200 கோடி டாலருக்கும் அதிகமாக கடன் வாங்கி ஏமாற்றிவிட்டார். இதனால் வங்கிகளின் வராக்கடன்  அதிகரித்தது. எனவே, பெரு நிறுவனங்களில் சுயமாக செயல்படும் இயக்குநர்கள் செயல்பாடுகளால் இதுபோன்ற மோசடிகள் நடக்கின்றன. எனவே அவர்களுக்கு அவர்களது பணி தொடர்பான முழு அளவிலான விழிப்புணர்வு, பொறுப்பை அறிந்து கொள்ள  வசதியாக இந்த தேர்வை நடத்த முடிவு செய்துள்ளோம் என்றும் னிவாஸ் தெரிவித்தார். ஆன்லைனில் நடத்தப்படும் தேர்வில் இந்திய கம்பெனி சட்டங்கள் பற்றிய அடிப்படை, நன்னடத்தை விதிமுறைகள், கேபிட்டல் மார்க்கெட் விதிமுறைகள் பற்றி கேள்விகள் இடம்பெறும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கம்பெனி இயக்குநர்கள்  இந்த தகுதி தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும். எத்தனை முறை வேண்டும் என்றாலும் அவர்கள் தேர்வு எழுதிக் கொள்ளலாம் இதில் எந்த கட்டுப்பாடும் இல்லை என்று அவர் கூறினார்.

மூலக்கதை