சென்னை, திருத்தணியில் 108 டிகிரி வெயில்

தினகரன்  தினகரன்
சென்னை, திருத்தணியில் 108 டிகிரி வெயில்

சென்னை: கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் நேற்று வெயில் கொளுத்தியது. சென்னை, திருத்தணியில் 108 டிகிரி வெயில் கொளுத்தியது. தென்மேற்கு பருவமழை காலம் தற்போது தொடங்கியுள்ளதை அடுத்து  தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.  இந்நிலையில், வட மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் வெயிலின் தாக்கம் குறையாமல் நீடிக்கிறது. அதிபட்சமாக சென்னை, திருத்தணியில் 108 டிகிரி வெயில் கொளுத்தியது. திருச்சி, கடலூர் 106 டிகிரி, பரங்கிப்பேட்டை 104 டிகிரி, புதுச்சேரி, மதுரை, காரைக்கால் 102 டிகிரி வெயில் நிலவியது. இதையடுத்து, வெயிலின் தாக்கம் இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும். சில இடங்களில் வெப்ப காற்று வீசும். குறிப்பாக நாமக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை மாவட்டங்–்களில் இயல்பைவிட கூடுதலாக 3 டிகிரி செல்சியஸ் வெயில் அதிகமாக இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மூலக்கதை