கேரளாவில் 18ம் தேதி மோட்டார் வாகன ஸ்டிரைக்

தினகரன்  தினகரன்
கேரளாவில் 18ம் தேதி மோட்டார் வாகன ஸ்டிரைக்

திருவனந்தபுரம்: கேரளாவில் பஸ், லாரி, ஆட்டோ மற்றும் டாக்சிகள் உட்பட வாகனங்களுக்கு ஜூன் இறுதிக்குள் ஜி.பி.எஸ். கருவி பொருத்த வேண்டும் என்று மோட்டார் வாகன போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கு கேரள  மோட்டார் வாகன உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்நிலையில் கேரள மோட்டார் வாகன பாதுகாப்பு அமைப்பின் அவசர ஆலோசனைக் கூட்டம் நேற்று திருச்சூரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி கட்டாயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 18ம் தேதி  வேலைநிறுத்தம் செய்வது என தீர்மானிக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் பஸ், லாரி, ஆட்டோ, டாக்சிகள் கலந்து கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை