தீவிரவாதிகள் தாக்குதலில் 5 சிஆர்பிஎப் வீரர்கள் பலி

தினகரன்  தினகரன்
தீவிரவாதிகள் தாக்குதலில் 5 சிஆர்பிஎப் வீரர்கள் பலி

ஸ்ரீநகர்: காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்்ள கேபி சவுக் பகுதியில்  பேருந்து நிலையம் அருகே சிஆர்பிஎப் வீரர்கள் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த தீவிரவாதிகள், திடீரென தாக்குதல் நடத்தினர். இதற்கு  வீரர்களும் பதிலடி கொடுத்தனர்.  தீவிரவாதிகள் கையெறி குண்டுகளையும் வீசி தாக்குதல் நடத்தினர். இந்த சண்டையில், அதே இடத்தில் வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார். மேலும், படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 4  வீரர்கள் சிகிச்சை பலனின்றி இறந்தனர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் தப்பி விட்டனர். அவர்களை தேடும் பணியில் பாதுகாப்பு படை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதனிடையே, பாரமுல்லாவில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லபட்டார்.

மூலக்கதை