ரயில் பயணிகளிடம் கொள்ளை மீட்கப்பட்ட நகைகள் ஒப்படைப்பு

தினகரன்  தினகரன்
ரயில் பயணிகளிடம் கொள்ளை மீட்கப்பட்ட நகைகள் ஒப்படைப்பு

ஈரோடு: ஈரோடு, சேலம், கோவை வழியாக செல்லும் ரயில்களில் ஈரோடு ஹோம் சிக்னல் மற்றும் மாவேலி பாளையம்  அருகே பெண்களிடம் மர்மநபர்கள் நகைகளை பறித்து சென்றனர். இதுதொடர்பாக, ரயில்வே டிஜிபி   சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் 5 தனிப்படை அமைக்கப்பட்டு, கொள்ளையில் ஈடுபட்ட மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மொகல் தாலுகா  பகுதியை சேர்ந்த 4 பேரை கைது செய்தனர்.  இவர்கள் அளித்த தகவலின் படி மகாராஷ்டிரா  மாநிலம் சோலாப்பூர் சென்று 27  பவுன் நகைகளை போலீசார் மீட்டனர். இவற்றை ரயில்வே போலீஸ் டிஐஜி  பாலகிருஷ்ணன் நேற்று உரியவர்களிடம் வழங்கினார்.

மூலக்கதை