அமராவதி அணையில் காவிரி துணைக்குழு அதிகாரிகள் ஆய்வு

தினகரன்  தினகரன்
அமராவதி அணையில் காவிரி துணைக்குழு அதிகாரிகள் ஆய்வு

உடுமலை: காவிரி ஒழுங்காற்று துணை குழுவினர் நேற்று உடுமலை அருகே உள்ள அமராவதி அணை மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.காவிரி நீர் ஒழுங்காற்று துணைக்குழுவினர் நேற்று முன்தினம் மேட்டூர் அணையையும், நேற்று பவானிசாகர் அணையையும் ஆய்வு செய்தனர். இதன் தொடர்ச்சியாக  நேற்று உடுமலை அடுத்துள்ள அமராவதி அணை பகுதியிலும், முக்கிய  நீர்பிடிப்பு பகுதியான தேனாறு, பாம்பாறு, சின்னாறு சேரும் இடமான ஜீரோ பாயின்ட் ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.தொடர்ந்து கேரள மாநிலத்தில் உள்ள அணைகளிலும் நேரில் ஆய்வு மேற்கொண்டு அடுத்த மாதம் இறுதிக்குள் காவிரி நீர் மேலாண்மை வாரியத்திடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என துணைக்குழுவினர் தெரிவித்தனர்.

மூலக்கதை